1973-ல் நான்,மோகன்,கஜபதி,பாலு அனைவரும் காரைக்குடி கிளையில் பணியில் சேர்ந்தபோது ,மெய்யப்பன் எங்களுக்கு வழிகாட்டி.அவர்தான் கிளை செயலாளர்.தொழிற்சங்கம் பற்றிய நெறிமுறைகளையும்,௹ ௹௹அவசியத்தையும் நன்கு உணர்த்தியவர்.நாங்கள் வங்கியிலே பெற்ற பாராட்டுக்கள் எல்லாம் மெய்யப்பன் அவர்களையே சேரவேண்டும். வங்கிப்பணியிலே அவர் அசகாயசூரன். வாடிக்கையாளர் சேவையிலோ அவர் யாரும் எட்டமுடியாத மைல்கல். அவருட பணிசெய்யும் வாய்ப்பு நான் செய்த பாக்கியம்,......... ஒரு முறை அல்ல.....இரண்டு முறை அல்ல...மூன்று முறை........... காரைக்குடி......தி.நகர்...........சென்னை பிரதானக்கிளை.............. சென்னை பிரதானக்கிளை அனுபவம் நாங்கள் அனுபவித்த ஒன்று..... யாரும் சீர்செய்ய முடியாத வேலைகள் என்னிடத்திலும்,மெய்யப்பனிடத்திலும் வரும்.அனைத்திலும் சிக்கல்களை சரிசெய்து,நாங்கள் பெற்ற பாராட்டுக்கள், என்றும் மறக்க முடியாதவை.
காரைக்குடிக்கிளையில் பணியில் சேர்ந்து, மீண்டும் அங்கே.....மேலாளராக...... மீண்டும்.................. முதுநிலை மேலாளராக..... சேவை செய்யும் வாய்ப்பு பெரும்பேறு.....
தொழிற்சங்கப்பணியில் இவர் ஒரு தீவிரவாதி.... காரைக்குடியில் பணி ஓய்வு என்பது....தொழிற்சங்கம் கொடுத்த பாராட்டு....
பாரத நிதி அமைச்சர் பங்கேற்ற இரு பெரும் விழாக்களை வெற்றிகரமாக நடத்திய பெருமை இவருக்கு என்றும் பெருமிதம்.
என்றென்றும் புன்னகை.....இவர் முத்திரை................... மனித நேயம் மிக்க ......பார் போற்றும் பண்பாளர்.......
மெய்யப்பனார் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
என்.அழகப்பன்
No comments:
Post a Comment