பணி நிறைவு பாராட்டு
1973 இல் வங்கியில் பணியில் சேர்ந்தோம்.ஒன்றாகவே....
பசுமையான நினைவுகள்....மறக்க முடியவில்லை....
2008-ம் வந்துவிட்டது.2009-ம் வந்துவிட்டது.
காலங்கள் ஓடிவிட்டன......
நான் காரைக்குடியிலிருந்து சென்னை........
தாங்களோ....காரைக்குடியிலிருந்து....ஊட்டி....
மீண்டும்.....காரைக்குடி......
எப்பொழுதும் அமைதி...புன்முறுவல்.....அது முத்துகிருஷ்ணன் தனிப்பாணி...
வாடிக்கையாளர் சேவையில் உம்மை மிஞ்ச ஆளில்லை....
வங்கிப் பணியானாலும் ,சங்கப் பணியானாலும் சாதனை படைத்த சான்றோன் நீர்!
காரைக்குடிக் கிளையின் அச்சாணி .....அது கழட்ட முடியாது...
உற்ற தோழர் விழாவினில் நேரில் கலந்துகொள்ள நானில்லை...
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள நிலை...பொறுத்தருள்க.......
தாங்களும்,தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று
மகிழ்வான நல வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தங்கள் பணி தொடரட்டும்........
வாழ்த்துக்களுடன்,
என்.அழகப்பன்
No comments:
Post a Comment