அன்புத்தோழர் மோகன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.சென்னை பிரதானக்கிளை பணி ஓய்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக....தோழர் விஜயன் ........மே ,2008தோழர் குருசுவாமி ....ஆகஸ்ட்,2008தோழர் ராஜாராம்........அக்டோபர்,2008நானும் ...அக்டோபர் மாதத்தில்தான்............அந்தநாளும் வந்துவிடுமோ என்று......இப்போது நம் தோழர் மோகன்.......குருசுவாமி,அழகப்பன்,மோகன் ....மூவர் அணிமுற்றுப்பெற்றது.... மோகனுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் ....நாங்கள் இருவரும் ஒரே நாளில் காரைக்குடி கிளையில் வங்கிப்பணியில் சேர்ந்தோம்...காரைக்குடியில் சேர்ந்தே தங்கினோம்........இருவரும் சென்னைக்கு மாற்றலாகி வந்தோம்....வேறு வேறு கிளைகள்......ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது....கடந்த சில ஆண்டுகளாக சென்னை பிரதானக்கிளையில்மீண்டும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்தது...தோழர் மோகன் பலாப்பழம் போன்றவர்...வெளியிலே முள்ளைப்போன்ற தோற்றமளிப்பவர்...உள்ளே இனிமை.....இனிமை....இனிமை....இனிமையைதவிர வேறொன்றுமில்லை..மிகுந்த இறைஅன்பு உள்ளவர்.வாடிக்கையாளர் சேவையிலே இவருக்கு நிகர் இவரேதான்....இவரது ஓய்வுக்குப்பின் வாடிக்கையாளர்கள் இவரை தினமும் வங்கிக்கு வரவழைப்பார்கள்....என்றே எண்ணுகிறேன்.....வங்கியைபொருத்தவரையில் மீண்டும் ஒரு நல்ல உழைப்பாழியை இழக்கிறது.......மோகன் 35 ஆண்டு கால பொன்னான சேவைக்கு பிறகு பணி ஓய்வு பெறுகிறார்...அவரும் அவர் குடும்பத்தாரும் நல்ல ஆரோக்யத்துடனும்,மகிழ்விடனும்,வாழவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்...பிறருக்கு பயன்பட வாழும் உமது தொண்டு தொடரட்டும்......வாழ்த்துக்களுடன்,
என்.அழகப்பன்,
உ.வே.ச.
16 years ago
No comments:
Post a Comment